தென்மேற்கு வங்கக் கடலில் உருவான பெஞ்சல் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நேற்று வழுவிழந்தது. இருப்பினும் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கி மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மீட்பு பணிகள் என்பது துரிதமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தொடர் மழை காரணமாக இன்று தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, தர்மபுரி, சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 5 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதே போன்று புதுச்சேரியிலும் தொடர் மழை பெய்து வருவதால் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.