இன்றைய கார்ப்பரேட் உலகில் நிலவும் கடுமையான வேலைப்பளு மற்றும் 9 டூ 5 டார்ச்சர்களில் இருந்து விடுபட்டு, சொந்தமாக பிசினஸ் தொடங்கி சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு ரோல் மாடலாக மாறியுள்ளார் 33 வயதான மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ் ஒருவர். 2024 ஆம் ஆண்டின் பாதியில் தனது முழுநேர கார்ப்பரேட் வேலையை ராஜினாமா செய்த இந்த இளைஞர், தற்போது சொந்தமாக ஸ்டார்ட்அப் தொடங்கி மாதம் 1.8 லட்சம் ரூபாய் வரை லாபம் ஈட்டி வருவதாக சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் பரவி பகிரப்பட்டு வருகிறது.

“இப்பொழுது நான் எந்த கார்ப்பரேட் விதிகளுக்கும் கட்டுப்பட்டவன் அல்ல, டிராஃபிக்கில் அலைய வேண்டியதில்லை, மழைக்காலத்தை என் கிராமத்து வீட்டில் இருந்தபடியே ரிமோட் வொர்க் மூலம் என்ஜாய் செய்கிறேன்” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும், புதிய ஸ்டார்ட்அப் தொடங்குபவர்களுக்கு டிப்ஸ் கொடுத்துள்ள அவர், கையில் போதிய பேக்கப் சேமிப்பு இல்லாமல் வேலையை விட வேண்டாம் என்றும், ஆரம்பத்தில் அதிக பணம் தரும் நிறுவன வாடிக்கையாளர்கள் விட, குறைவான பணம் தரும் நிறுவன வாடிக்கையாளர்கள் தான் பிசினஸ் சிஸ்டத்தை மேம்படுத்த கற்றுக்கொடுப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.

 

“கார்ப்பரேட் நிறுவனங்களில் அடிமையாக இருப்பதை விட இது எவ்வளவோ மேல்” என நெட்டிசன்கள் பலரும் இளைஞரின் இந்த முயற்சிக்கு தங்களின் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.