உத்திரபிரதேசம் மாநிலம் பண்டா மாவட்டத்தில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. நபர் ஒருவர் தன்னுடைய மருமகளை தனது ஆசைக்கு இணங்கும் படி அடிக்கடி துன்புறுத்தியுள்ளார். தன்னுடன் உறவு கொண்டால் மாதம் 5000 ரூபாய் தருவதாகவும் இல்லை என்றால் கொன்று விடுவதாகவும் கூறி மிரட்டியுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரும் தந்தைக்கு ஆதரவாக இருந்த நிலையில் அந்த பெண் தன்னுடைய பெற்றோர் வீட்டுக்கு சென்று உள்ளார். இதனைத் தொடர்ந்து தனது மாமனார் மீது அந்தப் பெண் போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.