உத்திரபிரதேசம் மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் சமதர் என்ற பகுதியில் சமீபத்தில் ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. ஜிதேந்திர குமார் மற்றும் தீபா ஆகியோருக்கு பெரியவர்கள் முன்னிலையில் கடந்த வியாழக்கிழமை திருமணம் நடந்துள்ளது. திருமண விழாவுக்கு பின்னர் விருந்தினர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது வினிதா மற்றும் பூஜா என்ற இரு பெண்கள் அங்கு வந்துள்ளனர்.

ஜிதேந்திராவின் முதல் மனைவி வினிதா, இரண்டாவது மனைவி பூஜா. இவர்கள் இருவருக்குமே குழந்தைகளும் உள்ளனர். இதனைக் கண்டு ஆத்திரம் அடைந்த மணமகளின் உறவினர்கள் மணமகனை கடுமையாக தாக்கி போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.