உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ராம்பூர் பகுதியில் 11 வயது சிறுமி ஒருவர் ஆடுகள் மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு 15 வயதுடைய 3 சிறுவர்கள் நின்று கொண்டிருந்தனர். இவர்கள் சிறுமி தனியாக ஆடு மேய்ப்பதை பார்த்த நிலையில் சிறுமியை வலுகட்டாயமாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.

இது தொடர்பாக சிறுமி தன் பெற்றோரிடம் கதறி அழுதபடியே கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து 15 வயதுடைய 3 சிறுவர்களையும் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.