தமிழகத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் பயன்பெற என்னென்ன தகுதி வேண்டும் என்பதை இதில் பார்க்கலாம். அதாவது இந்த திட்டத்தில் பயன்பெற ஆண்டு வருமானம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக இருக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலரிடம் வருமானச் சான்று பெற்று குடும்ப அட்டை மற்றும் ஆதாருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்து காப்பீடு அட்டையை பெற்றுக் கொள்ளலாம்.

குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் இந்த திட்டத்தில் பயன்பெற முடியும். முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் ஏராளமான மக்கள் பயனடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.