தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கொண்டிசெட்டிபட்டி பகுதியில் விவசாயியான கோவிந்தராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் உடல் நலம் பாதிக்கப்பட்ட தனது தாய் மங்கம்மாளை மருத்துவமனைக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் பாலக்கோடு ரோடு ஏரிக்கரை பகுதியில் சென்ற போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் கோவிந்தராஜனின் மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த மூதாட்டியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு மூதாட்டியை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.