மும்பையின் குரலாவில் பகுதியில் பேருந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 55 வயதான கன்னிஸ் பாத்திமா அன்சாரி என்பவர் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். இந்த நிலையில் ஹெல்மெட் அணிந்த ஒரு நபர் விபத்தில் உயிரிழந்து கிடந்த பெண்ணிடம் இருந்து தங்க நகைகளை திருடும் காட்சி சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில் பாத்திமா கையில் இருந்த மூன்று தங்க வளையல்களை அந்த நபர் திருடி சென்றுள்ளார். அந்த வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் அந்த நபரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.