மத்திய கல்வி நிறுவனங்களில் இனி இது கட்டாயம்…. பள்ளிக்கல்வித்துறை புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் தாய்மொழி தமிழ் கற்பிக்கப்படுவதில்லை என்று புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் இயங்கி வரும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடமாக்கும் சட்டம் கடந்த 2015 ஆம் ஆண்டு அமலுக்கு வந்த நிலையிலும் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே தமிழ் மொழி கற்பிக்கப்படும் எனவும் நடப்பு கல்வி ஆண்டில் 9 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் செயல்படும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மற்றும் ராணுவ துறையின் சைனிக் பள்ளியிலும் பத்தாம் வகுப்பு வரை தமிழ் கட்டாயம் கற்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை அனைத்து பள்ளிகளிலும் அமல்படுத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.

Leave a Reply