தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் அனைவரும் பாடத்திட்டத்துடன் சேர்ந்து தொழில்நுட்ப உலகிற்கு தேவையான திறன் படிப்புகளை வழங்கும் விதமாக நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஒவ்வொரு வருடமும் பல லட்சக்கணக்கான மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள்.
இந்நிலையில் SSC, ரயில்வே தேர்வு மற்றும் வங்கி தேர்வு போன்ற மத்திய அரசு போட்டி தேர்வு எளிதாக எதிர்கொள்ளும் வகையில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இலவச பயிற்சிகள் வழங்கப்படுகிறது. மாவட்டம் தோறும் 180 மாணவர்களுக்கு மட்டுமே இதில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும் என்பதால் பயிற்சியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் tnskill.tn.gov.in என்ற இணையதளத்தில் விரைவாக விண்ணப்பிக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.