தற்போது மழைக்கால கூட்டத் தொடர் துவங்கவுள்ளது. அதில் இம்முறை அரசு பல்வேறு பெரிய அறிவிப்புகளை வெளியிடக்கூடும் என்று எதிர்பார்க்க்கப்படுகிறது. அதன்படி ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வுடன், 18 மாத டிஏ நிலுவைத்தொகையையும் அரசு ஊழியர்களின் கணக்கில் போடலாம் என்ற கருத்துகள் வேகமாக பரவி வருகிறது. இவை இரண்டும் கிடைத்தால் அது ஊழியர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.

அரசாங்கம் அகவிலைப்படியை 4% அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. இதன் வாயிலாக ஊழியர்களுக்கு மிகப்பெரிய ஆதாயம் கிடைக்கும். இருப்பினும் அகவிலைப்படி உயர்வு தேதி பற்றி மத்திய அரசால் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் விரைவில் ஊழியர்களுக்கு அரசு மிகப் பெரிய அறிவிப்புகளை வெளியிடக்கூடும் என வட்டாரங்கள் தெரிவித்து வருகிறது.