இதுவரையிலும் கோடிக்கணக்கான ரேஷன் அட்டைகள் ஆதாருடன் இணைக்கப்படவில்லை. உங்களின் ரேஷன் கார்டு மற்றும் ஆதார் இணைக்கப்படவில்லை எனில், ரேஷன் கார்டு அரசால் ரத்து செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. ரேஷன்-ஆதார் கார்டு இணைப்பு செயலை மேற்கொள்வதற்கான காலக்கெடு மார்ச் 31, 2023 என கூறப்பட்டிருந்த சூழலில், இப்போது இந்த காலக்கெடு ஜூன் 30, 2023 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

வரும் ஜூன் 30-க்குள் ரேஷன்-ஆதார் இணைக்கப்படாவிட்டால் உங்களின் ரேஷன் அட்டை தானாகவே ரத்து செய்யப்பட்டு ஜூலை 1 முதல் ரேஷனில் கிடைக்கும் இலவச கோதுமை மற்றும் அரிசி போன்ற உணவு தானியங்கள் கிடைக்காது. ரேஷன் கார்டு ரத்துசெய்யப்பட்டு விட்டால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கவேண்டி இருக்கும். பாஸ்போர்ட் மற்றும் பான்கார்டு தவிர்த்து ரேஷன் கார்டை அடையாள மற்றும் முகவரி சான்றாக பயன்படுத்திக்கொள்ளலாம்.