கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புன்னார்குளம் பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுதன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் 12-ஆம் வகுப்பு படித்துவிட்டு துணிக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி ஒழுங்காக வேலைக்கு செல்லாமல் இருந்த சுதனை அவரது தாய் செல்வராணி கண்டித்துள்ளார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த சுதன் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுதனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.