வருடந்தோறும் ஐஏஎஸ் ஐஎஃப்எஸ், ஐஆர்எஸ் அதிகாரிகளுக்கான கிரிக்கெட், இறகுப் பந்து கால்பந்து போட்டிகள் தமிழ்நாடு அரசு சார்பாக நடத்தப்படுவது வழக்கம் ஆகும். இந்நிலையில் விளையாட்டு போட்டிகள் போரூரிலுள்ள தனியார் மருத்துவ கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடந்தது. இதில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான கிரிக்கெட் போட்டியை துவங்கி வைத்தார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது “சென்ற 1 1/2 மாதங்களாக விளையாட்டு அரங்குகளுக்கு சென்று நேரில் சந்தித்து கோரிக்கைகளை கேட்டு வருகிறேன். அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து முதல்வரிடம் கோரிக்கையாக வைத்து உள்ளோம். தேர்தலில் செங்கல்லை கையில் வைத்து சுற்றிவந்தேன். செங்கல்லை பற்றி அனைவரும் பேச ஆரம்பித்துள்ளனர். ஒன்றிய அரசுக்கு வைக்கிற ஒரே கோரிக்கை என்னவெனில், மதுரை மக்கள் செங்கல்லை கையிலெடுக்கும் முன் வேலையை தொடங்க வேண்டும்” என கூறினார்.