
தமிழகம் முழுவதும் இன்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் களைகட்ட தொடங்கிவிட்டது. அதன்படி மதுரையில் உள்ள அவனியாபுரம் உள்ள பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் இதற்காக தடுப்புகள் அமைக்கப்பட்டது. அந்த வகையில் மதுரை அவனியாபுரத்தில் உள்ள நடிகர் வேல ராமமூர்த்தியின் வீட்டின் முன்பாகவும் ஜல்லிக்கட்டு போட்டிக்காக தடுப்புகள் அமைக்கப்பட்டது. இதன் காரணமாக நேற்று வேலராம மூர்த்தியின் மனைவி வீட்டிற்கு வெளியே வர முடியவில்லை என்று கூறி கோபத்தில் அரிவாளை எடுத்து வந்து அந்த தடுப்புகளை வெட்டியுள்ளார்.
அதாவது தன்னுடைய வீட்டில் வயதானவர்கள் இருக்கும் நிலையில் இன்று மாலை என்னுடைய வீட்டிற்கு உறவினர்கள் வர இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது இப்படி தடுப்புகளை அமைத்தால் எப்படி வெளியே வர முடியும் என்று கூறி வேலராம மூர்த்தியின் மனைவி தகராறு செய்தார். அதாவது அவனியாபுரம் பகுதியில் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தை சுற்றி குடியிருப்பு பகுதிகள் இருப்பதால் பாதுகாப்பிற்காக தடுப்புகள் அமைக்கப்பட்டது. மேலும் இதன் காரணமாக நேற்று அரிவாளை எடுத்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.