மதுரை விமான நிலையத்தில் ஏப்ரல் 1 முதல் 24 மணி நேரமும் விமான சேவையை தொடங்க விமான போக்குவரத்து துறை அனுமதி வழங்கி உள்ளது. மதுரை மட்டுமின்றி அகர்தலா, இம்பால், போபால், சூரத் விமான நிலையங்களும் ஏப்ரல் 1 முதல் 24 மணி நேர சேவையை தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பகல் நேரத்தில் மட்டுமே விமானங்கள் இயக்கப்பட்ட நிலையில் இரவிலும் விமானங்களை இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. கோரிக்கையை ஏற்று 24 மணி நேரமும் விமான சேவையை தொடங்க விமான போக்குவரத்து துறை அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி ஏப்ரல் 1 முதல் 24 மணி நேர சேவை தொடங்கும் என இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது.