டெல்லி மதுபான கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாக கூறி சிபிஐ பல மாதங்களாக விசாரணை நடத்தி வந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். இதற்கு ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் மணிஷ் சிசோடியா உச்சநீதிமன்றத்தில் ஜாமினில் விடுவிக்க கோரி மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து மணிஷ் சிசோடியோ தன்னுடைய துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும் மணிஷ் சிசோடியாவின் ராஜினாமாவை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்றுக் கொண்டுள்ளார்.