தமிழக முழுவதும் இன்று காலை 10 மணிக்கு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. மாநில அளவிலான விவரங்களை தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரத சாகு தெரிவிக்க உள்ளார். தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு கடந்த நவம்பர் ஒன்பதாம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் அதில் பெயர்களை சேர்ப்பது மற்றும் விவரங்களை திருத்துவது உள்ளிட்ட பணிகளுக்காக ஒரு மாதம் அவகாசம் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து இறுதி வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்ற வந்த நிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை இன்று தலைமை தேர்தல் அதிகாரி வெளியிடுகிறார்.