பிரதமர் nநரேந்திர மோடி அவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு தூத்துக்குடி வருகை தந்திருந்தார். அப்போது ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் அனைவருக்கும் ₹5000 வழங்க உள்ளதாக சமூக வலைத்தளங்களில் விளம்பரம் ஒன்று வைரலானது. இதனை உண்மையென நம்பிய சிலர், அதில் கொடுக்கப்பட்ட லிங்கை கிளிக் செய்து வங்கிக் கணக்கு விவரங்களை பகிர்ந்துள்ளனர்.

ஆனால் அவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக உடனே, அவர்களின் கணக்கில் இருந்து பணம் மாயமானது. பொதுமக்கள் இதுபோன்ற விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என சைபர் போலீசார் எச்சரித்துள்ளனர்.