தமிழ்நாட்டில் பொதுவாக மழை காலங்களில் டெங்கு, சிக்கன் குனியா போன்ற கொசுக்களால் நோய்கள் பரவும். இதன் காரணமாக மழைக்காலங்களில் வீடுகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நீர்கள் தேங்காத அளவுக்கு பார்த்துக் கொள்வதோடு தண்ணீரை மூடி வைத்துக் கொள்ள வேண்டும். அதோடு தண்ணீர் தேங்கி இருக்கும் இடத்தில் கொசுக்கள் இருந்தால் பிரச்சனை என்பதால் அந்த இடங்களை சுத்தமாக வைத்திருப்பது அவசியம்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் நடப்பாண்டில் மட்டும் டெங்கு காய்ச்சலால் 20,138 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதோடு 7 பேர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் முந்தைய காலங்களில் டெங்கு தொடர்பான உயிரிழப்புகள் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இனிவரும் காலங்களில் உயிரிழப்புகளை தடுப்பதற்கான நடவடிக்கைகள் இன்னும் தீவிர படுத்தப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.