தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு கடந்த சில தினங்களாக தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் இன்றும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
மேலும் தற்போது இரவு 10 மணி வரை தமிழகத்தில் 9 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பொழிய வாய்ப்பு உள்ளதாக தற்போது வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி, திண்டுக்கல், தேனி, நாமக்கல், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.