தனி நபர்களுடைய அன்றாட நிதி சூழலை பாதிக்கும் விதமாக ஏராளமான மாற்றங்கள் நாளை (மார்ச் 1 ) முதல் நமக்கு வரவுள்ளது. இதில் பொதுமக்கள் மிக முக்கியமான விஷயங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது உள்ளது. அதன்படி ஒவ்வொரு மாதமும் பணம் சார்ந்த விதிமுறைகளில் மாற்றங்கள் வருகிறது. அந்த வகையில் பிப்ரவரி மாதம் முடிந்து மார்ச் மாதம் தொடங்க உள்ளது. இதில் என்னென்ன மாற்றங்கள் வருகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

சிலிண்டர் விலை:

ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் பல மாற்றங்கள் இருக்கும். முன்னதாக பிப்ரவரி மாதத்திலும் பல விதிமுறைகள் மாற்றப்பட்டது. அந்த வகையில் மார்ச் முதல் தேதி முதல் புதிய மாற்றங்கள் நமக்கு வருகிறது .சிலிண்டர் விலை, கிரெடிட் கார்டு ஜிஎஸ்டி போன்ற பல மாற்றங்கள் இருக்கும். சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதி மாற்றி அமைக்கப்படுகிறது. கடைசியாக பிப்ரவரி 1ஆம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலையை உயர்த்தியது. அதே நேரத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் விலையை மாற்றவில்லை. தேர்தல் நடக்க இருப்பதால் இந்த மாதம் சிலிண்டர் விலை குறையுமா என்று மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளார்கள்.

ஜிஎஸ்டி:

மார்ச் முதல் தேதியில் இருந்து ஜிஎஸ்டி தொடர்பான விதிகளும் மாறுகின்றன .அடுத்த மாதம் முதல் ஐந்து கோடி ரூபாய்க்கு மேல் வியாபாரம் செய்யும் நிறுவனங்கள் இ-இன்வாய்ஸ் இல்லாமல் இ- பில் உருவாக்க முடியாது. இதிலும் மாற்றம் வருகிறது .

கிரெடிட் கார்டு:

ஸ்டேட் பேங்க் இந்தியா தன்னுடைய கிரெடிட் கார்டு பயனர்களுக்கு குறைந்தபட்ச நாள் பில் கணக்கீடு செயல்முறையில் மாற்றத்தை கொண்டு வருகிறது. இந்த புதிய மாற்றம் மார்ச் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளது.

பேடிஎம் பேமெண்ட் வங்கி:

பேடிஎம் பேமெண்ட் வங்கி மீது ரிசர்வ் வங்கி சமீபத்தில் நடவடிக்கை எடுத்தது. மார்ச் 15ஆம் தேதிக்கு பிறகு பேடிஎம் பேமென்ட் வங்கியின் செயல்பாடுகளுக்கு ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

வங்கி விடுமுறை:

பிப்ரவரி மாதத்தில் மொத்தம் வங்கிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை வந்தது. அதேபோல மார்ச் மாதத்தில் மொத்தம் 14 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.