இங்கிலாந்தின் மன்னர் மூன்றாம் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். இதனால் பொது பணிகளில் இருந்து தற்காலிகமாக ஒதுங்கி இருக்கும் மன்னர் சார்லஸ் விரைவில் குணமடைய வேண்டும் என்று சர்வதேச நாட்டுத் தலைவர்களும் இங்கிலாந்து மக்களும் சமூக வலைதள பக்கங்களில் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மன்னர் சார்லஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “கடந்த சில தினங்களாக எனக்கு கிடைக்கும் ஆதரவு மற்றும் வாழ்த்து செய்திகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது போன்ற அன்பு ஊக்கத்தையும் ஆறுதலையும் தரும் என்பது அனைவருக்கும் தெரியும்.

நான் புற்று நோய்க்கு சிகிச்சை எடுக்கும் செய்திகள் மூலமாக பிற இடங்களில் இருக்கும் புற்றுநோய் சிகிச்சை மையங்கள் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்பட்டிருப்பது மகிழ்ச்சியை கொடுக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.