மும்பை போரிவலி ரயில்வே நிலையத்தில் அரங்கேறிய நெஞ்சை பிசையும் காதல் காட்சி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பி, ஒட்டுமொத்த நெட்டிசன்களையும் உற்றுநோக்க வைத்துள்ளது. ஓடும் ரயிலைப் பிடிக்க மக்கள் ஓடிக்கொண்டிருந்த பரபரப்பான நேரத்தில், ஒரு இளைஞன் தனது காதலியின் காலில் விழுந்து கதறி அழுது, தன்னை விட்டுப் போக வேண்டாம் எனக் கெஞ்சிய காட்சி அங்கு நின்றவர்களின் நெஞ்சைக் கரைய வைத்துள்ளது.

​மும்பையின் பரபரப்பான ரயில் நிலையங்களில் ஒன்றான போரிவலி (Borivali Railway Station) ரயில் நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. காதலிக்குள்ளும் காதலனுக்குள்ளும் என்ன சண்டை என்று தெரியவில்லை, ஆனால் காதலி தன்னை விட்டுவிட்டுப் போக முடிவெடுத்ததை அந்த காதலனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

சுற்றிலும் ஆயிரக்கணக்கான மக்கள் வேடிக்கை பார்க்கிறார்கள் என்பதைப் பற்றிப் பற்றிக் கூட கவலைப்படாமல், சட்டென அவளது காலில் விழுந்து, “என்னை விட்டுப் போயிடாதே” எனக் கண்ணீருடன் கெஞ்சத் தொடங்கினான்.v​இந்த உருக்கமான காட்சியைக் கண்ட அங்கிருந்த பயணிகள் சிலர், அதைத் தங்களது மொபைல் போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட, அது நொடிப் பொழுதில் காட்டுத்தீயாய் பரவி மில்லியன் கணக்கான பார்வைகளைக் கடந்து வருகிறது.

“உண்மையான காதலின் உச்சகட்டம் இதுதான்” என்று ஒரு தரப்பு நெட்டிசன்கள் அந்த இளைஞனுக்கு ஆதரவாக உருகி உருகி கமெண்ட் செய்து வருகின்றனர். ​இருப்பினும், “காதல், பிரிவு எல்லாமே தனிப்பட்ட விஷயம்… அதை இப்படி ரயில்வே ஸ்டேஷன் போன்ற பொது இடங்களில் அரங்கேற்றி மற்றவர்களுக்கு இடையூறு செய்யலாமா?” என்று மற்றொரு தரப்பினர் காரசாரமாக விவாதித்து வருகின்றனர்.

எது எப்படியோ, இந்த ஒரு வீடியோ காதல், ஏமாற்றம், உறவுகளில் ஏற்படும் விரிசல் மற்றும் ஒருவருக்காக எந்த எல்லைக்கும் போகத் துணியும் மனித மனங்களைப் பற்றி இணையத்தில் ஒரு பெரும் விவாத அலையையே கிளப்பியுள்ளது.