பொதுமக்கள் பல பேர் அஞ்சல் அலுவலகத்தால் வழங்கப்படும் திட்டங்களில் முதலீடு செய்ய விருப்பப்படுகின்றனர். ஏனென்றால் இவற்றில் வட்டி உடன் கூடிய நல்ல வருமானம் கிடைக்கும்.

15 வருட பொது வருங்கால வைப்புநிதி கணக்கு

இத்திட்டத்தில் ஒரு நிதி ஆண்டில் குறைந்தபட்சமாக ரூபாய்.500 மற்றும் அதிகபட்சம் ரூபாய்.1,50,000 வரை டெபாசிட் செய்யவும். இவற்றில் உங்களுக்கு வருடத்திற்கு 7.1 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. வட்டியானது வருடந்தோறும் கூட்டப்படுகிறது. நீங்கள் டெபாசிட்டை 12 கால தவணைகளில் செலுத்திக் கொள்ளலாம் மற்றும் முதிர்வுகாலம் 15 வருடங்கள் ஆகும்.

சுகன்யா சம்ரித்தி திட்டம்

பாலின சமத்துவத்தை மேம்படுத்தவும், பெண் குழந்தைகளின் பெற்றோருக்கு நிம்மதியை வழங்கவும் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இத்திட்டத்தில் உங்களுக்கு வருடத்திற்கு 7.6% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இதில் நீங்கள் உங்கள் பெண் குழந்தையின் பெயரில் தான் கணக்கை துவங்க முடியும். அதாவது, 10 வயது வரை கணக்கை திறக்கலாம்.

மூத்தகுடிமக்கள் சேமிப்புத் திட்டம்

மூத்தகுடிமக்களுக்கு சிறந்த வருமானத்தை தரக்கூடிய இத்திட்டம் 5 வருட முதிர்வு காலத்துடன் வருகிறது. அதிகபட்சமாக ரூபாய்.15 லட்சத்துக்கு மிகாமல் ரூபாய்.1000-க்கு மேல் ஒரே ஒரு டெபாசிட் மட்டுமே இருக்க முடியும். இவற்றில் உங்களுக்கு 8% வட்டிவிகிதம் வழங்கப்படுகிறது மற்றும் 60 வயதுடைய தனி நபர் இத்திட்டத்தில் பங்களிக்கலாம்.