தெலுங்கானா மாநிலத்தில் உள்ள காலேஸ்வரம் பகுதியில் காவல் நிலையம் அமைந்துள்ளது. இங்கு பாவனீசன் கவுட் என்பவர் சப் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த பெண் போலீஸ் ஒருவர் மீது தகாத முறையில் ஆசை கொண்டுள்ளார். ஆனால் அந்தப் பெண் போலீஸ் அதற்கு மறுத்துள்ளார். இவர்கள் இருவரும் ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் தனித்தனி வீடுகளில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் சம்பவ நாளில் பெண் போலீஸ் வீட்டுக்குள் ஜன்னல் வழியாக பாவனீசன் புகுந்தார். பின்னர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற நிலையில் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்து கத்தி கூச்சலிட்டுள்ளார்.

இதனால் துப்பாக்கியை காட்டி கொலை செய்து விடுவேன் என மிரட்டி அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார். இதை வெளியில் சொன்னால் அதிகாரத்தை பயன்படுத்தி என்ன வேணாலும் செய்து விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். இருப்பினும் அந்தப் பெண் தைரியமாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பாவனீசன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் இதே போன்று அவர் 3 பெண் காவலர்களையும் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவமும் தற்போது தெரியவந்தா அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.