தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு புஷ்பா திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயின் ஆக நடித்திருந்த நிலையில் நடிகை சமந்தா ஊ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு குத்தாட்டம் ஆடியிருந்தார். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். அதன் பிறகு பகத் பாஸில் வில்லனாக நடித்துள்ளார். இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த நிலையில் 400 கோடி வசூல் சாதனை புரிந்திருந்தது.
இந்த படத்தின் இரண்டாம் நேற்று வெளியான நிலையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது பட குழு முதல் நாள் வசூல் நிலவரம் குறித்த அறிவிப்பை வெளியிலுள்ளது. அதன்படி இந்த படம் முதல் நாளில் 294 கோடி வசூல் சாதனை புரிந்துள்ளதாக போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இதுவரை வெளியான படங்களில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் முதல் நாளில் 222 கோடி ரூபாய் வசூல் சாதனை குறைந்து இருந்த நிலையில் தற்போது அந்த சாதனையை புஷ்பா 2 முறியடித்து விட்டது. இந்தத் திரைப்படம் ஹிந்தியில் மட்டும் கிட்டத்தட்ட முதல் நாளில் 72 கோடி வரை வசூலித்துள்ளது. மேலும் முதல் நாளிலேயே புஷ்பா திரைப்படம் இவ்வளவு வசூல் சாதனை புரிந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.