பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 1 திரைப்படம் கடந்த வருடம் ரிலீஸ் ஆகி உலகம் முழுவதும் 400 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்தில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ஆம் தேதி ரிலீசாகும் என்று பட குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், பொன்னியின் செல்வன் 2 படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

அதாவது பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டிரைலர் மார்ச் 1-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பட குழு இன்னும் 100 நாட்களில் பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீஸ் ஆகும் என்று ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்த நிலையில், தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டிரைலர் மார்ச் 1-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று புதிய தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் பிரம்மாண்டமாக இருக்கும் என்று தகவல்கள் வெளிவருவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் இருக்கிறது.