மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டும் பொது வருங்கால வைப்பு நிதி எனப்படும் சமூக பாதுகாப்பு திட்டம் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த திட்டத்தில் அரசு ஊழியர்கள் தங்களின் சம்பளத்தில் குறிப்பிட்ட சதவிகிதத்தை GPF க்கு வழங்கலாம்.

இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டின் காலாண்டில் இந்த திட்டத்திற்கான வட்டி விகிதம் மாற்றியமைக்கப்பட்டு வரும் நிலையில் பொது வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதத்தை அக்டோபர் மற்றும் டிசம்பர் காலாண்டில் மாற்றாமல் 7.1 சதவீதமாக வைத்திருப்பதாக நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் ஜூலை மற்றும் செப்டம்பர் காலாண்டில் வட்டி விகிதம் 7.1 சதவீதமாக இருந்தது. இந்த நிலையில் நடப்பு ஆண்டில் பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் பிற ஒத்த நிதிகளுக்கு சந்தாதாரர்களின் வட்டி விகிதம் அதே விகிதத்தில் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.