நாடு முழுவது ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு மலிவு விலையில் ரேஷன் பொருட்கள், இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரேஷன் கடைகளுக்கு வந்து வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் என குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் அனைவரையும்   கைரேகை வைக்கச்சொல்லி மத்திய அரசு மறைமுக உத்தரவிட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

பிஎச்எச் மற்றும் ஏஏஒய் அட்டையில் எத்தனை குடும்ப உறுப்பினர்கள் இருந்தாலும் பெரியவர், சிறியவர் என பாகுபாடு இல்லாமல் அனைவரும் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளுக்கு வந்து, கைவிரல் ரேகையை மிஷினில் வைத்தால் மட்டுமே ரேஷன் பொருட்களை பெற முடியும் என்று தற்போது மறைமுக உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு தமிழக அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று ரேஷன் கடை பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்