தமிழகத்தில் பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டுவது வழக்கமாகிவிட்டது. சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள தெருக்களின் பெயர் பலகைகள் மற்றும் பேருந்து நிலையங்களில் எழுதப்பட்டிருக்கும் பேருந்து கால அட்டவணை என பல இடங்களில் விளம்பர சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன. இவை பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பதாகவும் மாநகராட்சியின் அழகை சீர்குலைப்பதாகவும் உள்ளது.

இதனை கருதி தமிழகத்தில் பாதுகாப்பு சட்டம் 1952 இன் படி பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்ட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டக்கூடாது என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. விதிக்கப்பட்ட தடையை மீறி சுவரொட்டிகள் ஒட்டும் நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.