கர்நாடக மாநிலத்தில் தமிழ் பயலும் மாணவர்களை ஊக்குவிப்பதற்காக பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் சிறப்பிடம் வகிக்கும் மாணவர்களுக்கு பரிசு தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டுக்கான பொதுத் தேர்வில் தமிழ் பாடத்தில் சிறப்பிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு மொத்தம் 50 ஆயிரம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

அதன்படி முதலிடம் பிடிக்கும் மாணவருக்கு 10000 ரூபாய், இரண்டாம் இடம் பிடிக்கும் இரண்டு மாணவர்களுக்கு தலா 5000 ரூபாய், மூன்றாம் இடம் பிடிக்கும் மூன்று மாணவர்களுக்கு தலா 3000 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 21 மாணவர்களுக்கு ஊக்கப்பரிசு தலா 1000 ரூபாய் வழங்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது.