தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகை பலன் 2000 ரூபாய் ரொக்கம் வழங்க வேண்டும் என பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் மோகன் தாஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் பொங்கல் பரிசு தொகப்புடன் 2000 ரூபாய் வழங்க உத்தரவிட மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் பொங்கல் தொகுப்புடன் 2000 ரூபாய் ரொக்கம் வழங்குவது அரசின் கொள்கை முடிவு என கூறி மோகன் தாஸ் தொடர்ந்து வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.