தமிழக முழுவதும் நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பொங்கலை முன்னிட்டு சந்தைகளில் காய்கறிகள், பழங்கள் மற்றும் பூக்களின் வரத்தை அதிகரித்துள்ளது. அதேசமயம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை நான்கு மடங்கு வரை உயர்ந்துள்ளது.
இதில் அதிகபட்சமாக சென்னை கோயம்பேடு மொத்த விற்பனை சந்தையில் மல்லிகை கிலோ 3500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. முல்லை கிலோ 2000 ரூபாய், அரளி 600 ரூபாய், கனகாம்பரம் கிலோ 1200 ரூபாய், ஜாதி மல்லி கிலோ 2100 ரூபாய், சாமந்தி கிலோ 120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நாளை பூக்களின் விலை இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் என கூறப்படுகிறது