விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காந்தலவாடி கிராமத்தில் திவான் என்பவர் வசித்து வருகிறார். அதே கிராமத்தைச் சேர்ந்த மற்றொருவர் முருகன். இவர்கள் இரண்டு பேரும் நண்பர்கள் ஆவர்.  இரண்டு பேரும் சமையல் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் இருவருக்கும் மதுப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் இரண்டு பேரும் மடப்பட்டியில் சமையல் வேலையை முடித்துவிட்டு மது போதையில் பண்ருட்டி அருகே உள்ள சிறிய கிராமத்திற்கு வந்துள்ளனர். இவர்களது உறவுக்கார மாணவரான மணிபாலன் என்பவர் அந்த கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

அந்த மாணவனை அழைத்து செல்வதற்காக இவர்கள் அங்கு வந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் பட்டாக்கத்தியை  சுழற்றிக்கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. அதனை கண்ட அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து திவான் மற்றும் முருகனை கைது செய்துள்ளனர். அதன்பின் அவர்கள் இரண்டு பேரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்களும் அதனை ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து அவர்களுடன் உடன் இருந்த உறவுக்கார மாணவன் மணிபாலனுக்கு காவல்துறையினர் அறிவுரை கூறி எச்சரிக்கை விடுத்து பெற்றவுடன் அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.