பேருந்து கவிழ்ந்து விபத்து…. 24 பேர் பலி…. பெரு நாட்டில் சோகம்….!!

பெரு நாட்டிலுள்ள அயகுச்சோவா பகுதியில் இருந்து ஹூவான்சாயோ பகுதிக்கு பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் திடீரென அந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பெண்கள் குழந்தைகள் உட்பட 24 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மேலும் ஏராளமானோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்திற்கான காரணம் பெருநாட்டில் உள்ள தரமற்ற மற்றும் பராமரிப்பு இல்லாத சாலைகள் தான் என்று கூறப்படுவதோடு இதுபோன்ற சாலை விபத்துகள் அடிக்கடி நடப்பதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Leave a Reply