ஒடிசா அருகே சுற்றுலா பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகி ஐவரை பலி வாங்கியிருக்கிறது. கட்டாக் நகரிலிருந்து மேற்குவங்கம் நோக்கி சென்ற தனியார் சொகுசு பேருந்து, பராபதி என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் இருந்து கீழே விழுந்து விபத்திற்குள்ளானது. இதில் பயணிகள் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த 38க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.