பாகிஸ்தான் நாட்டில் 48 வயதுடைய ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு மொத்தம் மூன்று மனைவிகள் மற்றும் 10 குழந்தைகள் இருக்கிறார்கள். இவருடைய முதல் மனைவி இறந்துவிட்டதால் மற்ற இரு மனைவிகளுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இவர் தன்னுடைய 12 மற்றும் 15 வயதுடைய இரு மகள்களை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதன் காரணமாக அந்த சிறுமிகள் தந்தை தூங்கும்போது பெட்ரோல் ஊற்றி அவரை தீ வைத்து எரித்துவிட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் உயிரிழந்தார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.