பஞ்சாப் மாநிலத்தில் மல்வீந்தர் சிங் சிந்து என்பவர் வசித்து வருகிறார். இவர் காவல் துறையில் உதவி ஐஜியாக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மருமகன் ஹர்பிரீத் சிங் ஆவார். இவர் நீர் பாசனத்துறையில் வருவாய் துறை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் குடும்பத் தகராறு இருந்த நிலையில் அதற்கு தீர்வு காண்பதற்காக நீதிமன்றத்தை நாடினர். அவர்கள் இருவரிடமும் நீதிமன்றத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் மல்வீந்தர் சிங் கழிவறைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.

அப்போது அவருடைய மருமகனும் அறையை விட்டு வெளியேறினார். இந்நிலையில் திடீரென மல்வீந்தர் சிங் துப்பாக்கியால் 5 முறை தன் மருமகனை நோக்கி சுட்டார். இதில் 2 குண்டுகள் அவர் மீது பட்டது. உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை தடுத்து நிறுத்தினார். இதைத்தொடர்ந்து அவருடைய மருமகன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட நிலையில் செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து மல்வீந்தர் சிங்கை கைது செய்ததோடு அவரை சஸ்பெண்ட் செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.