
சென்னை சர்வதேச புத்தகத் திருவிழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். அவர் கூறியதாவது, 166 தமிழ் புத்தகங்கள் 32 மொழிகளுக்கு மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. பெரியாரின் கருத்துக்கள் 16 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. பெரியாரின் கருத்துக்களை அறிவியல் சார்ந்த நடைமுறைகளாக பள்ளிக்கல்வித்துறை செயல்படுத்தி வருகிறது.
தமிழில் இருந்து பிற மொழிகளுக்கு மொழியாக்கம் செய்யப்பட்ட 30 நூல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 18ம் தேதி சென்னை பன்னாட்டு புத்தகக் காட்சியில் வெளியிட உள்ளார். தமிழை உலகளாவிய அளவிற்கு மொழிபெயர்க்க 35 இலக்கிய வல்லுநர்களை நாம் பயிற்சி செய்துள்ளோம் என கூறியுள்ளார்.