பெண் சிசுக் கொலையை தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஒரு பெண் குழந்தையின் பெற்றோருக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை ரூ.35 ஆயிரத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் என இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் அறிவித்துள்ளார்.  ஒரு பெண் குழந்தை பிறந்தவுடன் குடும்பக் கட்டுப்பாட்டைப் பின்பற்றும் பெற்றோருக்கு ரூ.2 லட்சமும், இரண்டு பெண் குழந்தைகள் பிறந்த பிறகு குழந்தை வேண்டாம் என்று முடிவு செய்பவர்களுக்கு ரூ.1 லட்சமும் வழங்கப்படும் என்று கூறினார்.

இமாச்சல பிரதேச மாநிலத்தில் பெண் குழந்தை பிறந்தால் அதை கொன்றுவிடும் பழக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.