இந்தியாவின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு அவர்களுடைய வீட்டு வாசலுக்கு சென்று வங்கி  சேவை  வழங்குவதற்கான ஒரு கையடக்க கருவியை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் வீட்டில் இருந்தபடியே பல்வேறு வங்கி சேவைகளை  தர முடியும். இந்த முயற்சியின் நோக்கம் நிதி உள்ளடக்கத்தை வலுப்படுத்துவதே ஆகும். சாதாரண மக்களுக்கு அத்தியாவசிய வங்கி சேவைகளை வழங்குவது இதன் முக்கிய குறிக்கோள்.

இந்த வசதியானது வாடிக்கையாளர்களுக்கு நேரடியாகவே கியோக்ஸ் வங்கி வசதியை கொண்டு வருகிறது. மூத்த குடிமக்கள் மற்றும் ஊனமுற்றோருக்கு இந்த திட்டம் பெரும் உதவியாக இருக்கும். மொபைல் கையடக்க சாதனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலமாக வாடிக்கையாளர்கள் வீட்டில் இருந்தபடியே பரிவர்த்தனை செய்யும் அனுபவத்தை பெறுவார்கள் .இந்த தொழில்நுட்பமானது கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு வசதியான மற்றும் வீட்டு வாசலில் வங்கி பரிவர்த்தனை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.