மும்பையை சேர்ந்த ராம்தாஸ் கெய்ரா என்பவர் வங்கியில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவருக்கு இரண்டு முறை திருமணம் ஆகிவிட்டது. இரண்டு மனைவிகளும் இறந்துவிட்டனர். இந்த நிலையில் தனிமையில் இருந்த ராம் தாசுக்கு கவிதா என்ற பெண் அறிமுகமானார். கடந்த வருடத்திலிருந்து கவிதாவும் ராம்தாசும் லிவிங் முறையில் வாழ ஆரம்பித்தனர். உங்களையே திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என கவிதா கூறியுள்ளார். இதனை எதிர்பார்க்காத ராம் தாஸ் கவிதாவுக்கு தங்க நகைகள், பணம் என அள்ளி அள்ளி கொடுத்தார்.

அதனை எடுத்துக் கொண்டு கவிதா எஸ்கேப் ஆகிவிட்டார். மேலும் அங்குஷ் என்கின்ற வாலிபரை திருமணம் செய்து கொண்டார். ஆசை காட்டி மோசம் செய்த கவிதாவிடம் தான் கொடுத்த நகைகள் மற்றும் பணத்தை திரும்ப தருமாறு ராம்தாஸ் கேட்டார். இதனால் கவிதா மீண்டும் ராமதாசுடன் நட்பாக பழகி அவரது வீட்டிற்கு சென்று சாப்பாட்டில் மயக்க மருந்து கலந்து கொடுத்தார். அவர் மயங்கியவுடன் தனது கணவரை வரவழைத்து பயங்கரமான ஆயுதங்களால் ராமதாசை தாக்கியுள்ளார்.

இதனால் ராம்தாஸ் பரிதாபமாக உயிரிழந்தார். எதுவும் நடக்காதது போல புதுமணத் தம்பதியினர் ஊருக்கு கிளம்பி விட்டனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் ராமதாஸின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி கடைசியாக ராமதாஸ் வீட்டிற்கு வந்து சென்ற கவிதா மற்றும் அவரது கணவரை பிடித்து விசாரித்தனர். இருவரும் சேர்ந்து ராமதாசை கொலை செய்தது உறுதியானது. போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.