இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் நேற்று முன்தினம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் துவங்கியது. முதல்நாளில் பல பரபரப்பு காட்சிகள் அரங்கேறியது. இதையடுத்து 2வது நாளாக தமிழ்நாடு சட்டசபையானது நேற்று காலை 10 மணியளவில் கூடியது. அதன்பின் 3வது நாளாக இன்று காலை 10 மணிக்கு சட்டசபை கூட்டமானது தொடங்கியது. அப்போது உறுப்பினர்கள் கேள்விக்கு அந்தந்த துறைசார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர்.

இந்நிலையில் இன்று நடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் சுவாரசியமான நிகழ்வு ஒன்று நடைபெற்றது. அதாவது, இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 எப்போது கொடுப்பீர்கள் என்று அதிமுகவின் கே.பி.முனுசாமி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு,”நீங்கள் 2016 ஆம் ஆண்டு பெண்களுக்கு செல்போன் தருவதாக சொன்னீர்களே. கொடுத்தீர்களா?”.. என்று கேட்டார்.