இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் நேற்று முன்தினம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் துவங்கியது. முதல்நாளில் பல பரபரப்பு காட்சிகள் அரங்கேறியது. இதையடுத்து 2வது நாளாக தமிழ்நாடு சட்டசபையானது நேற்று காலை 10 மணியளவில் கூடியது. அதன்பின் 3வது நாளாக இன்று காலை 10 மணிக்கு சட்டசபை கூட்டமானது தொடங்கியது. அப்போது உறுப்பினர்கள் கேள்விக்கு அந்தந்த துறைசார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர்.

இந்நிலையில் ஒரு சென்ட் நிலத்தை கூட அண்டை மாநிலங்களுக்கு விட்டுக்கொடுக்க மாட்டோம் என அமைச்சர் kkssR ராமச்சந்திரன் உறுதி தெரிவித்தார். கேரள எல்லை பகுதியில் டிஜிட்டல் சர்வே எடுப்பது பற்றி பேரவையில் ஓபிஎஸ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ராமச்சந்திரன், நம் எல்லைப் பகுதியில் எந்த சர்வேயும் எடுக்கவில்லை. நம் பகுதியில் இதுபோன்ற சர்வே எடுப்பதற்கு முன் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கேரளா அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.