தமிழக சட்டசபை கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில் நீட் தேர்வு குறித்து சட்டசபையில் காரசார விவாதங்கள் நடைபெற்றது. அதாவது ஜெயலலிதா ஆட்சியில் இருந்த வரை நீட் தேர்வு தமிழகத்தில் நுழைய முடியவில்லை. ஆனால் நீட் தேர்வை உங்களால் ஏன் தடுத்து நிறுத்த முடியவில்லை என எடப்பாடி பழனிச்சாமியிடம் முதல்வர் ஸ்டாலின் நேரடியாக கேள்வி எழுப்பினார். அதற்கு எடப்பாடி பழனிச்சாமி நீட் தேர்வை தடுத்து நிறுத்துவதற்கு அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொண்டோம்.

ஆனால் எதுவுமே பலனளிக்கவில்லை என்று கூறினார். அதன்பிறகு நீட் தேர்வை தமிழகத்தில் கொண்டு வந்த பெருமை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சேரும் என்று அமைச்சர் மா. சுப்ரமணியன் கூறினார். அதன் பிறகு அதிமுக ஆட்சியில் நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பப்பட்ட தகவலை கூட சட்டசபையில் மறைத்து விட்டதாகவும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார். இதனையடுத்து அமைச்சர் ஐ. பெரியசாமி நுழைவுத் தேர்வை தமிழகத்துக்குள் அனுமதிக்க முடியாது என்ற தீர்ப்பை பெற்றது கலைஞர் கருணாநிதி தான் என்று கூறினார். மேலும் இவ்வாறாக சட்டசபையில் நீட் தேர்வு தொடர்பாக காரசார விவாதங்கள் நடைபெற்றது.