ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த 2024 ஆம் வருடம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மக்களை கவரும் விதமாக பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இந்த இலவச ஸ்மார்ட்போன் திட்டம் யாருக்கெல்லாம் வழங்கப்படும் என்றால் மாநில அரசின் சுகாதார காப்பீடு திட்டத்தின் இணைந்துள்ள 1.35 கோடி பெண்களுக்கு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் பெண்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. பெண்கள் ஸ்மார்ட் போன் வாங்க குறிப்பிட்ட தொகையை மானியமாக வழங்குவது குறித்து பரிசினை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் 100 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தும் குடும்பங்களுக்கு முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். அதேபோல 500 ரூபாய் மானிய விலையில் ஏழை எளிய மக்களுக்கு சிலிண்டர் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.