தமிழ்நாட்டில் பெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்கள் கடுமையான அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்ட நிலையில் முதல்வர் ஸ்டாலின் அந்த மாவட்டங்களுக்கு நிவாரணம் அறிவித்துள்ளார். அதன் பிறகு மத்திய அரசன் தமிழ்நாட்டிற்கு நிவாரணம் அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் நிதி உதவி வழங்கி வருகிறார்கள்.
அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் 10 லட்ச ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். அவர் பெஞ்சல் புயல் பாதிப்புக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 10 லட்ச ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார். திமுக கட்சியின் எம்பிக்கள் புயல் பாதிப்புக்காக தலா ஒரு லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் முன்பே அறிவித்துள்ளனர். இதேபோன்று உழவன் அறக்கட்டளை சார்பில் நடிகர் கார்த்தியும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து 15 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கியுள்ளார். மேலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் திமுக இடையே கடந்த சில நாட்களாக சுமுகமான நிலை இல்லாத நிலையில் அவர் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து இந்த நிவாரண நிதியை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.