காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடக் கூடாது என கர்நாடக அரசை வலியுறுத்தி பெங்களூருவில் செவ்வாய்க்கிழமை முழு அடைப்புப் போராட்டத்துக்கு பல்வேறு அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர். இதன் காரணமாக தமிழ்நாடு அரசுப் பேருந்துகள் கர்நாடகா, தமிழ்நாடு எல்லை வரை மட்டுமே இயக்கப்படுகிறது. ஆனாலும், பெங்களூரு அம்மாநில அரசுப் பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் உள்ளிட்டவை வழக்கம்போல் இயக்கப்படுகின்றன.

அசம்பாவிதங்கள் ஏற்பட்டுவிடாமல் இருக்க பெங்களூருவில் தற்போது 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கக்கூடாது என்பதில், அம்மாநில  காங்கிரஸ், பாஜக என அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.