அமெரிக்காவின் ஓியோவில் நடந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. ஒரு பெண் பூனையின் தலையை நசுக்கி கொன்று அதை சாப்பிட்டுள்ளார். அந்த பெண் சாலையில் அமர்ந்து பக்கத்தில் வீட்டார் முன் நிலையில் அந்த பூனையை சாப்பிட்ட வீடியோ காட்சிகள் பதிவானது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று அந்த பெண்ணை கைது செய்தனர்.
இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி அந்த பெண்ணின் செயல் வெறுக்கத்தக்கது என்பதை குறிப்பிட்டார். மேலும் இந்த நாட்டை அவமானப்படுத்தி உள்ளீர்கள். முக்கியமாக நீங்களே உங்களை அவமானப்படுத்தி விட்டீர்கள் என அந்த பெண்ணை விமர்சித்துள்ளார். பூனையை கொன்ற அந்த பெண்ணுக்கு ஓராண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.